தென்கிழக்கு துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 14 பேர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் காணாமல் போயுள்ளனர்.
நிலநடுக்கத்திற்குப் பிறகு கொள்கலன் வீடுகளில் வசித்து வந்தவர்கள் திடீர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களில் அடங்குவர்.
இதனிடையே சான்லியுர்ஃபா மற்றும் அதியமான் மாகாணங்களில் பெய்து வரும் கனமழையால், வீதிகளில் வெள்ளம் கரைபுரண்டோடியது. அப்போது, வீதியில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, ஒன்றோடொன்று மோதி உருக்குலைந்தன. இதில் 12 பேர் கொல்லப்பட்டனர்.
பூகம்பத்தால் வீடுகளை இழந்த மக்கள் கொள்கலன்களிலும், கூடாரங்களிலும் வசித்துவரும் நிலையில், திடீர் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை அண்மையில் துருக்கியில் ஏற்பட்ட பூகம்பத்தில் 48,000 பேர் கொல்லப்பட்டனர் .
Several injured & killed after massive floods hit #Sanliurfa, #Turkey
Same place that was hit by strong #earthquake in 6 Feb.#sanliurfasel #Tsunami #earthquake #earthquakeinturkey pic.twitter.com/HBjqDVxXGJ
— 𝐒𝐢𝐝𝐝 (@sidd_sharma01) March 16, 2023