இந்தியாவை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது அவுஸ்திரேலிய அணி!

Date:

இந்தியா-அவுஸ்திரேலியா அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.

டொஸ் வென்று முதலில் ஆடிய அவுஸ்திரேலியா 49 ஓவர்களில் 269 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 47 ஓட்டங்களை சேர்த்தார். அலெக்ஸ் கேரி 38 ரன்கள் எடுத்தார்.

இந்தியா தரப்பில் ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அக்சர் பட்டேல், சிராஜ் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

இதையடுத்து 270 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

17 பந்துகளை எதிர்கொண்ட அவர் 2 பவுண்டரி, 2 சிக்சருடன் 30 ஓட்டம் எடுத்திருந்த நிலையில்ஆட்டமிழந்தார். மறுமுனையில் சற்று நிதானமாக ஆடிய சுப்மன் கில் 37 ரன்கள் சேர்த்தார்.

அதன்பின் விராட் கோலி-கே எல் ராகுல் ஜோடி சற்று நம்பிக்கை அளித்தது. கே எல் ராகுல் 32 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். அக்சர் பட்டேல் 2 ரன்னில் வெளியேறினார்.

மறுமுனையில் அரை சதம் கடந்த விராட் கோலி 54 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் சூரியகுமார் யாதவ் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். 185 ஓட்டங்களில் 6 விக்கெட்டை இழந்த நிலையில், ஹர்திக் பாண்ட்யா அணியை சரிவிலிருந்து மீட்க போராடினார்.

அவர் 40 ரன்களில் அவுட் ஆனார். அடுத்த சில நிமிடங்களில் ரவீந்திர ஜடேஜா 18 ரன்னில் வெளியேறினார். இதனால் இந்தியாவின் வெற்றிக் கனவு தகர்ந்தது. கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய ஷமி 1 பவுண்டரி, 1 சிக்சருடன் 14 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

குல்தீப் யாதவ் 6 ரன்னில் விக்கெட்டை இழந்தார். 49.1 ஓவர்களில் இந்திய அணி 248 ஓட்டங்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் அவுஸ்திரேலியா 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை அவுஸ்திரேலியா 2-1 என கைப்பற்றியது.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...