இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை (பிசிசிஐ) இந்த வருடத்துக்கான (2022-2023) வீரர்களின் புதிய ஒப்பந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த வருடாந்திர ஒப்பந்தம் அக்டோபர் 2022 முதல் செப்டம்பர் 2023 வரை திகதியிடப்பட்டுள்ளது.
குறித்த ஒப்பந்தத்தில் முதன்முறையாக இந்திய அணியின் விக்கெட் காப்பாளர் சஞ்சு சாம்சன் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.