இலங்கையில் உள்ள ஈரான் இஸ்லாமியக் குடியரசின் தூதரக கலாசாரப் பிரிவின் கவுன்சிலர் டொக்டர் பஹ்மன் முஅஸ்ஸமி குதாரிசி நேற்று முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இஸட்.ஏ.எம்.பைஸல் கவுன்சிலருடன் நல்லெண்ண நோக்கத்துடன் கலந்துரையாடினார்.
இதன்போது, திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் அன்வர் அலியும் கலந்து கொண்டிருந்தார்.