உக்ரைனின் முக்கிய நகரத்தை கைப்பற்ற ரஷ்யா தீவிர முயற்சி!

Date:

உக்ரைன்-ரஷ்யா போர் ஓர் ஆண்டை கடந்தும் முடிவில்லாமல் நீண்டு வருகின்றது. இந்த போரில் உக்ரைனின் பல முக்கிய நகரங்களை ரஷ்யா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

அந்த வரிசையில் கிழக்கு உக்ரைனில் உள்ள பாக்முத் நகரை கைப்பற்ற கடந்த சில மாதங்களாக ரஷ்யா கடுமையாக சண்டையிட்டு வருகின்றது.

அந்த நகரை நாலாபுறமும் சுற்றிவளைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்த ரஷ்ய படைகள் தற்போது நகருக்குள் நுழைந்து விட்டன.

அவர்கள் நகரத்தை கைப்பற்றும் முனைப்பில் உக்ரைன் வீரர்களுடன் ஆக்ரோஷமாக சண்டையிட்டு வருகின்றனர்.

ரஷ்ய படைகளின் இடைவிடாத தாக்குதல்களில் பாக்முத் நகரம் நிலைகுலைந்துள்ளது. அங்கு வாழும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்காமல் பாதுகாப்பு முகாம்களில் வாழ்க்கையை கழித்து வருகின்றனர்.

தாக்குதல்கள் தீவிரமாக இருந்தாலும் பாக்முத் நகரம் இன்னும் ரஷ்ய படைகளின் கைகளுக்கு செல்லவில்லை என அந்த நகரின் மேயர் அலெக்சாண்டர் மார்ச்சென்கோ தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பொலித்தீன் பைகளுக்கு கட்டணம்!

பொலித்தீன் பாவனையால் ஏற்படும் சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கு வேலைத்திட்டமொன்றை வகுக்கக் கோரி,...

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...

மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!

மொனராகலையில் உள்ள அரச பாடசாலையொன்றின் மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டதில் ஆசிரியர் சிறு...

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...