யாழ்.போராட்டம் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக சென்ற பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட குழுவினரை வெளியேறுமாறும் யாழ்ப்பாணத்துக்காகப் போராட வேண்டாம், எனவும் வலியுறுத்தி சாதாரண மக்கள் குழுவொன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பயங்கரவாதச் சட்டத்தை உடனடியாக வாபஸ் பெறுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி நடத்தப்படவுள்ள போராட்டம் தொடர்பாக யாழ். பல்கலைக்கழக மாணவர் சங்கங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் வசந்த முதலிகே உள்ளிட்ட குழுவினர் யாழ். ரிம்மர் மண்டபத்தில் கலந்துரையாடிய போதே இந்த போராட்டம் இடம்பெற்றுள்ளது.
சாதாரண மக்கள் குழுவொன்று ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், கொழும்பில் இருந்து மக்களை உடனடியாக பேச்சுவார்த்தையை நிறுத்திவிட்டு யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொண்டனர்.