ஐக்கிய மக்கள் சக்தியின் 40 எம்.பிக்கள் ரணிலுடன் இணைவர்

Date:

ஐக்கிய மக்கள் சக்தியின் 40 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணையவுள்ளதாக முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் விஜேமான்ன நேற்று (29) தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இவர்கள் பல்வேறு வழிகளில் ஜனாதிபதிக்கு உடன்படிக்கையை வழங்கியுள்ளதாகவும் இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியுடன் இணைந்து கொள்வார்கள் என தனக்கு தனிப்பட்ட முறையில் அறிவிக்கப்பட்டதாகவும் விஜேமான்ன குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, மிகக் குறுகிய காலத்திற்குள் இந்த எம்.பி.க்கள் குழு அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, காலியில் உள்ள சுற்றுலா ஹோட்டல்களுக்குச் சென்று ஆர்ப்பாட்டம் செய்து வெளிநாட்டினரை பயமுறுத்தி சுற்றுலா வர்த்தகத்தை உடைக்க ஜே.வி.பி முயற்சிப்பதாகவும் லக்ஷ்மன் விஜேமான்ன குற்றம் சுமத்தியுள்ளார்.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...