பல மாதங்களாக நீர் கட்டணத்தை செலுத்தத் தவறிய 40,000 இற்கும் மேற்பட்ட நுகர்வோருக்கான நீர் விநியோகத்தை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை துண்டித்துள்ளது.
நிலுவைத் தொகை ரூ. 1.6 டிரில்லியனுக்கும் அதிகமாக உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
இதேவேளை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையானது உள்நாட்டு நுகர்வோர், வணிகங்கள் மற்றும் அரச நிறுவனங்கள் உட்பட 15,000 பேர் மீது வழக்குகளை பதிவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார் .
செப்டெம்பர் 2022 இல் கட்டண அதிகரிப்புக்கு பின்னர் நீர் கட்டண தீர்வு விகிதம் 40% குறைந்துள்ளது.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைக்கு செலுத்த வேண்டிய மொத்த நிலுவைத் தொகை சுமார் ரூ. 8.4 டிரில்லியன்.
இதனால் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையானது தற்போது கடுமையான நிதி சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.