கொழும்பில் 90 வீதமான  மரணங்கள் மாரடைப்பால் ஏற்படுகின்றன !

Date:

கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 90 வீதமான  மரணங்கள் மாரடைப்பினால் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது.

அதேநேரம் கொழும்பு மாநகரசபை பகுதியில் ஒவ்வொரு வாரமும் மாரடைப்பு காரணமாக சுமார் பதினைந்து மரணங்கள் பதிவாகுவதாக கொழும்பு மாநகர மரண விசாரணை அதிகாரி இரேஷா சமரவீர தெரிவித்துள்ளார்.

30 முதல் 80வயதுக்குட்பட்டவர்களே பெரும்பாலும் மாரடைப்பால்  இறக்கின்றனர்.  கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் இவ்வாறான உயிரிழப்புகள் அதிகம் என கொழும்பு மாநகர விபத்து மரண விசாரணை அதிகாரி இரேஷா சமரவீர தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், சிறிய மார்பு வலியை அலட்சியம் செய்வதும், எண்ணெய் உணவுகளை சாப்பிடுவதும் அதிக மாரடைப்புக்கு வழிவகுப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கூடுமானவரை அடிக்கடி உடற்பயிற்சி செய்வதில் ஆர்வம் காட்டினால் மாரடைப்பு ஏற்படுவதைத் தவிர்க்கலாம் என்றும் மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Popular

More like this
Related

2026 முதல் 6 மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்த திட்டம்!

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று...

வடக்கு-கிழக்கில் இன்று ஹர்த்தால்!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று திங்கட்கிழமை (18) காலை...

பாடசாலை மூன்றாம் தவணை இன்று ஆரம்பம்!

அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான கல்வி...

நாட்டின் பல பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (18) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...