சவூதி அரசாங்கத்தினால் இலங்கைக்கு உலர் உணவுப் பொதிகள் அன்பளிப்பு!

Date:

இலங்கையிலுள்ள வறிய மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கான உலருணவுப் பொதிகள் சவூதி அரேபியாவினால் இலங்கைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளன.

இந்த உலருணவுப் பொதிகளை பகிர்ந்தளிக்கும் நிகழ்வு இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் அல் கஹ்தானி தலைமையில் கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதுவராலயத்தில் நேற்றையதினம் (28)  இடம்பெற்றது.

இந்நிகழ்வில் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இஸட்.ஏ.எம் பைசல் மற்றும் உதவிப் பணிப்பாளர் எம.எல்.எம். அன்வர் அலி உள்ளிட்டோர் கலந்துகொண்டார்.
இதேவேளை, இந்த நன்கொடைத் திட்டமானது சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகார, தஃவா மற்றும் வழிகாட்டல் அமைச்சின் கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது.

நாட்டிலுள்ள பள்ளிவாசல்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்புக்களின் ஊடாக தகுதியான மக்களுக்கு இந்த உணவுப் பொதிகளை விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ரமழான் மாதத்தை முன்னிட்டு சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸினால் இந்த உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...