தமிழ் மக்களுக்கு பயங்கரவாத தடைச் சட்டம் புதிதல்ல: வசந்த முதலிகே – யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் சந்திப்பு

Date:

தமிழ் மக்களுக்குப் பயங்கரவாத தடைச் சட்டம் புதிதல்ல. அவர்களுடைய பிரச்சினை தொடர்பில் தெற்கில் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தினால் இணைந்து செயல்படுவது தொடர்பில் பரிசீலிப்போம் என யாழ். பல்கலைக்கழகம் மாணவர் ஒன்றிய தலைவர் அழகராசா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (12) இடம்பெற்ற அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் வசந்த முதலிகே தலைமையிலான குழுவினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கலந்துரையாடலில் பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்றாக நீக்குவதற்கு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயல்பாடுகளுக்குக் கழக மாணவர் ஒன்றியம் ஆதரவை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அது மட்டுமல்ல, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களுக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பங்கெடுப்பதில்லை எனவும் கூறப்பட்டது.

 தமிழ் மக்கள் பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்பட வேண்டும் எனப் பல வருட காலமாகக் கோரிய போதும் குறித்த சட்டம் நீக்கப்படாது தமிழ் மக்களை அடக்குவதற்காகப் பிரயோகிக்கப்பட்டது.

ஆதலால் தமிழ் மக்கள் பயங்கரவாத தடை சட்டத்துக்குப் பழகிப்போன நிலையில் அதை நாம் பெரிய விடயமாகக் கருதவில்லை .

தமிழ் மக்கள் இலங்கையில் பல்வேறு பிரச்சினைகளை எதிர் நோக்குகின்ற நிலையில் அதனைத் தென் இலங்கையை நோக்கி எடுத்த செல்வதற்கு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தயாராக இருக்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்தோம்.

ஆகவே, தமிழ் மக்கள் எதிர் நோக்குகின்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் தென் இலங்கையில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குரல் கொடுக்க முன்வருமானால் பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பங்கெடுப்பது தொடர்பில் பரிசீலிப்போம் என அவர்களிடம் தெரிவித்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

Popular

More like this
Related

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறட்சியான வானிலை!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் வரண்ட வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட...

கடந்த கால அனுபவங்களால் மக்கள் அச்சப்படுவது இயல்பானது: அரசிடம் முறையான தீர்வு உண்டு.:நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை!

இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது மத்தியகிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக ஜனாதிபதி...

இலங்கையர்களுக்காக விசேட அவசர அழைப்பு எண்கள் அறிமுகம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தினால் அங்குள்ள சுமார் 10 இலட்சம்...