தாய்லாந்தில் காற்று மாசுபாடு கணிசமாக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதனைக் கருத்திற் கொண்டு கடந்த வாரத்தில் மாத்திரம் சுவாசக் கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு நோய்களினால் கிட்டத்தட்ட 02 இலட்சம் பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தாய்லாந்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இதுவரை 1.1 மில்லியன் மக்கள் காற்று மாசுபாடு காரணமாக பல்வேறு நோய்களுக்கு ஆளாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
சுமார் 11 மில்லியன் மக்கள்தொகை கொண்ட உலகின் முன்னணி சுற்றுலா நகரமாக திகழும் தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கின் வானம் மஞ்சள் மற்றும் சாம்பல் புகையால் மூடப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தாய்லாந்தில் காற்று மாசுபாட்டிற்கு போக்குவரத்து புகை, கரியமில வாயு மற்றும் நிலத்தை எரிப்பது ஆகியவை முக்கிய காரணிகளாகும்.
பாங்காக்கில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தால் தொடர் அறிவுரைகளை கடைபிடிக்க வேண்டும் என மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அதன்படி, மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரும்போது தரமான முகமூடியை அணியுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் சிறு குழந்தைகள் முடிந்தவரை வீட்டுக்குள்ளேயே நேரத்தைச் செலவிடுவது அவசியம் என்றும் சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.