தேயிலை விலையில் வீழ்ச்சி!

Date:

டொலரின் பெறுமதி வீழ்ச்சி மற்றும் ரூபாவின் பெறுமதி உயர்வினால் ஒரு கிலோ தேயிலை தூளின் பெறுமதி 200 ரூபாவினால் குறைந்துள்ளதாக தோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
டொலரின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்தால் தேயிலையின் விலை மேலும் வீழ்ச்சியடையும் எனவும், இதனால் தேயிலை கைத்தொழில் கடுமையாக பாதிக்கப்படும் எனவும் தோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உலக சந்தையில் ஒரு கிலோ மலையக தேயிலை 1,250 ரூபாவிற்கு கிடைத்ததாகவும், தற்போது 1,050 ரூபாவாக குறைந்துள்ளதாகவும் தோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
மின்கட்டண அதிகரிப்பு காரணமாக ஒரு கிலோ தேயிலை உற்பத்திக்கு அதிக செலவை சுமக்க வேண்டியுள்ள நிலையில், ஒரு கிலோ தேயிலைக்கு பெறப்படும் தொகை குறைவடைந்துள்ளமையினால் தேயிலை கைத்தொழில் கடும் ஆபத்தில் உள்ளதாக தோட்ட அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...