ரமழான் மாதம் தொடர்பாகவும் புனித மாதத்தை வரவேற்கும் முகமாகவும் உலகெங்கிலும் உள்ள நாடுகளிலும் பல்வேறு மொழிகளில் வித்தியாசமான முறையில் பாடல்களும் பலவித ஆக்கங்களும் வெளிவந்தவண்ணமிருக்கின்றன.
அந்தவகையில் உலகின் முக்கிய முஸ்லிம் நாடாகக் கருதப்படுகின்ற துருக்கியில் இருக்கின்ற இளைஞர்கள் குழுவொன்று ராமழானை வரவேற்கும் வகையில் அழகிய பாடலொன்றை வெளியிட்டுள்ளனர்.
இந்தப்பாடலை பாடும் குழுவினரில் இருக்கும் ஒருவர் துருக்கியிலே உயர்கல்வியை கற்று அங்கேயே வசிக்கின்ற இலங்கையின் வரக்காப்பொல நாங்கல்ல பகுதியைச் சேர்ந்த மஸ்லமா முனாஸ் என்பவரும் அடங்குகின்றார்.
சர்வதேச இமாம் ஹதிப் பழைய மாணவர்களால் பாடப்பட்ட இந்த ரமலான் துருக்கிய பாடல் சமூக வலைத்தளங்களிலும் அகிமாக பகிரப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
எனவே இந்தப்பாடலின் அழகிய வரிகளை வாசகர்களும் கேட்டு மகிழலாம்..!