நாட்டில் சமாதானம், நல்லிணக்கத்தை வலியுறுத்தி பௌத்த தேரர் ஒருவர் பாதயாத்திரை!

Date:

நாட்டில் சமாதானம் நல்லிணக்கத்தை வலியுறுத்தி பௌத்த தேரர் ஒருவர் இன்று நடைபயணமொன்றை ஆரம்பித்துள்ளார்.

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாகவும் சந்தோஷமாகவும் வாழ வேண்டி வெலிமட சதானந்த தேரர் யாழ்ப்பாணம் ஆரியகுளம் ஸ்ரீ நாகவிகாரையிலிருந்து தெய்வேந்திர முனைவரை பௌத்த சின்னத்தை தாங்கியவாறு இந்த நடை பயணத்தை ஆரம்பித்துள்ளார்.

இதன்போது, நாட்டில் சமாதானம் ஒற்றுமையினை வலியுறுத்தி நடைபயணத்தை ஆரம்பித்துள்ளதாகவும் தனது தூரநோக்கமான செயற்பாட்டிற்கு அனைத்து மக்களும் ஆதரவினை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டில் வாழ்கின்ற அனைத்து இன மக்களும் குல மத பேதம் இன்றி ஒற்றுமையாகவும் நிரந்தர சமாதானத்துடன் வாழ வேண்டி பிரார்த்தித்து நயினா தீவு ஸ்ரீ நாக விஹாரையில் வழிபாடுகளை மேற்கொண்டு ஆரியகுளம் நாக விகாரையில் இருந்து இலங்கையில் உள்ள அனைத்து பிரதேசங்களுக்கும் சென்று தெய்வேந்திர முனையில் தனது நடை பயணத்தை நிறைவு செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில்

இன்றையதினம் (12) நாட்டின் ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும்...

2026ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 18,000 எலிக்காய்ச்சல் சம்பவங்கள் பதிவு

நாட்டில் கடந்த ஒரு வருட காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 13,000 எலிக்காய்ச்சல்...

உணவு வகைகளின் விலைகள் அதிகரிப்பு!

நாட்டில் நிலவும் பொருளாதார சூழல் மற்றும் எரிசக்தி விலையேற்றம் காரணமாக, இன்று...

ரமழானில் இறுதி பத்து: பிக்ஹுல் இஃதிகாப்!

-முஹம்மத் பகீஹுத்தீன் இஃதிகாப் என்றால் என்ன? பொது வாழ்வின் சந்தடிகளை விட்டு தூரமாகி, அல்லாஹ்வை...