நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்கு 2023/2024 காலப்பகுதிக்கு தேவையான 2.25 மில்லியன் மெட்ரிக் தொன் நிலக்கரியை அரசாங்க கொள்முதல் செயல்முறையின் கீழ் கொள்வனவு செய்வதற்கு புதிய விலைமனு கோருவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
2023/2024 காலப்பகுதிக்கு தேவையான நிலக்கரியை பாதுகாப்பதற்காக கொள்முதல் செயல்முறையை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அமைச்சரவையின் ஒப்புதலை கோரியிருந்தார்.
முன்னதாக, 2022-2025 காலகட்டத்திற்கு வழங்கப்பட்ட நிலக்கரி விலைமனுவை இரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
ஏனெனில் விலைமனுவை பெற்ற நிறுவனம் பதிவு செய்யப்படாத நிறுவனம் என பின்னர் தெரிய வந்தது.