நாட்டின் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிமூலத்தில் நிலவும் வெற்றிடங்களுக்கு அரச சேவையிலிருந்து ஆசிரியர் தொழிலுக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சை 2023- உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டது.
பரீட்சை ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி. அமித் ஜயசுந்தர பரீட்சை இன்று நடைபெறும் அறிவித்திருந்தார்.
உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து மீண்டும் பரீட்சை நடத்தும் திகதி அறிவிக்கப்படவுள்ளது.
மேற்கண்ட போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்களுக்கான அழைப்பு அறிவிப்பு ஜனவரி 27, 2023 வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.