பண்டாரவளை மண்சரிவினால் 220 பேர் இடம்பெயர்வு: மீட்புப் பணிகள் உடனடியாக முன்னெடுப்பு

Date:

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நேற்று இரவு பண்டாரவளை, லியங்கஹவெல, கபரகல பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவினால் 62 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 220 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இடம்பெயர்ந்த மக்கள் தற்போது பூனாகலை கீழ் பகுதியில் உள்ள கல்லூரியில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மண்சரிவில் காயமடைந்த 5 பேரை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கொஸ்லந்த ஆதார வைத்தியசாலை மற்றும் தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த மண்சரிவினால் மூன்று வீடுகளும் ஒரு கடையும் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் மேலும் 20 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

இதன்போது மூன்று பொலிஸ் குழுக்களும் இராணுவத்தினரும் இந்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களை மீட்க நடவடிக்கை எடுத்ததாக பண்டாரவளை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் கலுபான தெரிவித்தார்.

இதேவேளை, உடனடியாக இங்கு மீட்பு பணிகளை முன்னெடுக்கவும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிகளை வழங்கவும் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் தலைவருடன் இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
பூனாகலை கபரகல தோட்ட முகாமையாளரை தொடர்பு கொண்ட செந்தில் தொண்டமான், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 24 மணித்தியாலங்களுக்குள் மாற்று இடங்களை வழங்காவிடின், தோட்டத் தொழிலாளர்களை வைத்து, பாதிக்கப்பட்ட மக்கள் தோட்ட முகாமையாளரின் இல்லத்தில் தங்கவைக்கப்படுவார்கள் என எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

Popular

More like this
Related

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...