பனாகொட இராணுவ முகாமில் உள்ள பாதுகாப்பு காவலரண் ஒன்றில் துப்பாக்கி திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரான இராணுவ சிப்பாய்க்கு நீண்டகாலமாக எச்.ஐ.வி தொற்றுக்குள்ளாகியிருந்தமை தெரியவந்துள்ளது.
அண்மையில், கொடகம கெத்தாராம விகாரையின் விஹாராதிபதியுடன் கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாயே இவ்வாறு தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது தெரியவந்ததையடுத்து, அவருடன் தொடர்பில் இருந்த ஏனையவர்களிடம் சுகாதார அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதேவேளை இந்த திருட்டுக்கு துணையாக இருந்தவரென கூறப்படும் இராணுவ அதிகாரி குறித்த தேரருடன் நெருங்கிய நட்பைப் பேணி வந்தவரென தெரியவந்துள்ளது