‘பாகிஸ்தானும் இலங்கையும் பல துறைகளில் நெருங்கிய உறவுகளை பேணி வருகின்றன’: பாகிஸ்தானின் தேசிய தின நிகழ்வில் உயர்ஸ்தானிகர்!

Date:

கொழும்பிலுள்ள பாகிஸ்தான்  உயர்ஸ்தானிகராலயம் பாகிஸ்தான் தேசிய தின வரவேற்பு நிகழ்வை நேற்று ஏற்பாடு செய்திருந்தது.

இதில் இலங்கை அரசியல் தலைமைகள், இராஜதந்திர அதிகாரிகள், மூத்த பாதுகாப்பு அதிகாரிகள், அரசாங்கப் பிரதிநிதிகள், பிரபல வர்த்தகப் பிரமுகர்கள், மற்றும் பாகிஸ்தானிய ஆதரவாளர்கள் என பெருமளவிலான பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர்.

இதன் போது கருத்துதெரிவித்த பாகிஸ்தானின் உயர் ஸ்தானிகர்  மேஜர் ஜெனரல் (ஓய்வு நிலை) உமர் பரூக் பர்கி அவர்கள்,

பாகிஸ்தானும் இலங்கையும் பரஸ்பர மரியாதை மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் நெருங்கிய உறவுகளை தொடர்ந்து பேணி வருகின்றன.

வர்த்தகம், பாதுகாப்பு, விஞ்ஞானம், கலாசாரம் மற்றும் கல்வி போன்ற பல துறைகளில் பாகிஸ்தான் – இலங்கை உறவு அடங்கியுள்ளது என்று தெரிவித்தார்.

மேலும் , இலங்கை அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் பாகிஸ்தான் அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர மற்றும் இந்நிகழ்வில் கலந்துகொண்ட  அனைவருக்கும் உயர்ஸ்தானிகர் நன்றி தெரிவித்ததோடு இரு நாடுகளும் தமது 75 வருட நட்புறவைக் கொண்டாடும் நிலையில், இந்த வருடம் பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கும் விசேடமானது எனவும் உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டினார்.

தேசிய தின வரவேற்பையொட்டி கலாச்சார கண்காட்சி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கண்காட்சியின் போது பாரம்பரிய கைவினைப் பொருட்கள், ட்ராக் வண்டி கலை, ஆடைகள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டன.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...