குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு பாகிஸ்தான் அரசாங்கத்தினால் உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
அதற்கமைய பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் உமர் ஃபாரூக் புர்கி குறித்த உலர் உணவுப் பொதிகளை தகுதியானவர்களுக்கு விநியோகிப்பதற்காக மருதானை மஸ்ஜித்/ஸ்ரீலங்கா வெல்ஃபேர் நிவாரண சங்கத்தின் பிரதிநிதிகளிடம் கையளித்தார்.
தொண்டு நிறுவனங்களைச் சார்ந்திருக்கும் வருமானம் குறைந்த ஏழை மக்களுக்கு இந்த உணவுப் பொருட்கள் பயனளிக்கக்கூடிய வகையில் இருக்கும்.
இதேவேளை, பாகிஸ்தான் எப்போதுமே இலங்கை மக்களுடன் தேவைப்படும் சமயங்களில் துணை நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது.