இந்த ஆண்டு ரமழானின் போது பிரிட்டிஷ் ஏர்வேஸ், பல மத்திய கிழக்கு ஏர்லைன்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து பயணிக்கும் வாடிக்கையாளர்களுக்கு இப்தார் விருந்துகளை தனது விமானங்களில் வழங்குகின்றது.
குவைத், பஹ்ரைன், ரியாத் மற்றும் டுபாய் உட்பட லண்டனுக்குச் செல்லும் மற்றும் புறப்படும் பல்வேறு வழிகளில், நோன்பு இடைவேளையின் போது பறக்கும் வாடிக்கையாளர்களுக்கு அரபு பேரீச்சம்பழம் மற்றும் பால் ஆகியவற்றை வழங்குகின்றது.
மேலும், ரமழான் நிறைவைக் குறிக்கும் வகையில், பிரிட்டிஷ் ஏர்வேஸ் தனது அனைத்து விமானங்களிலும் ஈத் பண்டிகையை கொண்டாடும்.
ஈத் அன்று விமானங்களில் பயணிக்கும் வாடிக்கையாளர்களுக்கு பண்டிகை மதிய உணவு அல்லது இரவு உணவு வழங்கப்படும்.
பிரிட்டிஷ் ஏர்வேஸ் பிராந்திய வர்த்தக மேலாளர் பனாஜியோடிஸ் தியோடோடோ, கூறுகையில், எங்கள் வாடிக்கையாளர்களில் பலருக்கு ரமழான் ஆண்டின் மிக முக்கியமான நேரம் என்பதை நாங்கள் அறிவோம்.
இந்த நேரத்தில் விமானத்தில் பயணிப்பவர்களுக்கு ஆதரவாக நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு லண்டனுக்கு செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் விமானங்களில் இப்தார் வழங்குகிறோம்.
விமானத்தில் பயணிக்கும் போது கூட எங்கள் வாடிக்கையாளர்கள் நோன்பு துறக்க இது உதவும் என நம்புகிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.