இலங்கையில் முஸ்லிம் சமூகத்தில் நீண்ட காலமாக சன்மார்க்கப் பணிபுரிந்து, நளீமிய்யா ,கபூரிய்யா உட்பட பல்வேறு அரபுக் கலாசாலைகளில் உஸ்தாதகவும், அதிபராகவும், கொழும்பு மற்றும் கொழும்புக்கு வெளியிலும் பிரபல பள்ளிவாசல்களில் குத்பா பிரசங்கம் செய்பவராகவும் பணிபுரிந்து, தற்போது முதுமையை அடைந்துள்ள நிலையில், திகாரியை வசிப்பிடமாக கொண்டு வாழ்ந்து வருகின்ற ஹஸ்ரத் அவர்களின் பணியை கௌரவிக்கும் நிகழ்வு கடந்த வியாழக்கிழமை (2023.03.02) அத்தர்பியா அல் இஸ்லாமிய்யாவின் ஏற்பாட்டில், விஜயகார்டன் வளாகத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வு உஸ்தாத் ரம்ஸி அவர்களின் கிராஅத்துடன் ஆரம்பமாகியது. அத்தர்பியா இஸ்லாமியாவின் பணிப்பாளர், அஷ்ஷெய்க், மிஹ்ளார் (நளீமி) அவர்களின் தலைமையுரை மற்றும் வரவேற்புரையும், உலமாக்களை கண்ணியப்படுத்துதல் தொடர்பாக அஷ்ஷெய்க் யூ.கே ரமீஸ் (நளீமி) அவர்களின் உரையும் இடம்பெற்றது.
உஸ்தாத் நூருல் ஹம்சா அவர்களுக்கு “கித்ரா” அணிவித்து கெளரவிக்கப்பட்டதோடு, நளீமிய்யா பழைய மாணவர்களால் நினைவுச்சின்னமும் , அத்தர்பியா அல் இஸ்லாமியாவினால் பரிசுகளும் வழங்கப்பட்டன.
இந் நிகழ்வில் அஷ்ஷெய்க், ஸரீர் அவர்கள், உஸ்தாத் நூருல் ஹம்ஸா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தொகுத்து வழங்கினார். அவ்வாறே கலாநிதி அலவி ஷரீப்தீன்(அவுஸ்திரேலியா) அவர்களின் சிறப்புரையும் இடம்பெற்றதோடு உஸ்தாத் நூருல் ஹம்ஸா அவர்களின் நஸீஹத்தும் இடம்பெற்றது.
அத்தர்பியா இஸ்லாமிய்யாவின் மாணவர்கள், மற்றும் அவர்களது பெற்றோர்கள், ஊர் பிரமுகர்கள், கல்விமான்கள் ,உஸ்தாத் நூருல் ஹம்ஸா அவர்களின் குடும்பத்தவர்கள் மற்றும் அவர்களது மாணவர்கள் என பலரும் கலந்து இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.