வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்ற போர்வையில் ஆட்கடத்தல்: தடுக்க விசேட நடவடிக்கை!

Date:

வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்ற போர்வையில் ஆட்கடத்தலை தடுக்கவும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தவும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக சட்டத்தை திருத்தியமைத்து விதிகளை வலுப்படுத்த தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆட்கடத்தலுக்கு எதிரான தேசிய செயலணியின் (NAHTTF) அவதானிப்புகளைப் பெறுவதற்கான விசேட கூட்டம் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் நடைபெற்றது.
ஆட்கடத்தலை தடுக்கும் விதமாக, பணி நிமித்தமாக வெளிநாடு செல்பவர்களின் தகவல்களை டிஜிட்டல் மூலம் கோப்பு அமைப்பில் பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
தயாரிக்கப்பட்ட புதிய திருத்தங்களுடன், ஆட்கடத்தலுக்கு எதிரான தேசிய செயலணியின் (NAHTTF) அவதானிப்புகளுடன் தொடர்புடைய விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை கடுமையாக்குவதற்கும் அதற்கேற்ப புதிய திருத்தங்களைச் செய்வதற்கும் முன்மொழிவுகள் தயாரிக்கப்பட்டுள்ளன

Popular

More like this
Related

முன்னாள் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவுக்கு மீண்டும் விளக்கமறியல்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளரான சுகீஸ்வர பண்டாரவை...

விசேட போக்குவரத்து நடவடிக்கை தொடர்பான அறிவிப்பு!

பொரலஸ்கமுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெல்லன்வில ராஜமஹா விகாரையில் நடைபெறும் எசல மகா...

36 ஆண்டுகள் ஆகியும் 121 உயிர்களை மிலேச்சத்தனமாக படுகொலை செய்த LTTE இன் இரத்த வெறியின் ஆறாத வடுக்கள்.

கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சுவடுகளில் ஆறாத வடுவாகப் பதிந்துவிட்ட ஏறாவூர் படுகொலை இடம்பெற்று...

பன்முகத்தன்மை மற்றும் சமூக அமைதி குறித்த சர்வதேச மாநாடு நைஜீரியாவில்..!(படங்கள்)

நைஜீரியத் தலைநகர் அபூஜாவில், சமூக அமைதி' குறித்த உலக முஸ்லிம் (ராபீதா)...