புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு சித்திரங்களின் மூலம் சிறுவர்கள் தங்கள் ஆன்மீக சிந்தனையை வெளிப்படுத்தியுள்ளனர்.
புனித ரமழான் என்பது பெரியவர்கள் மட்டுமன்றி சிறுவர்களும் மத்தியில் குதூகலத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும் காலமாகும்.
அவர்கள் ரமழானுக்கு தயாராகுவதற்காக பல்வேறு ஆயத்தங்களில் ஈடுபடுவது வழமையாகும்.
அந்தவகையில் புத்தளம் மாவட்டத்தில் அமைந்துள்ள அல் கலாம் குர்ஆன் பாடசாலையில் கல்விகற்கும் சின்னஞ்சிறு சிறுவர்கள் ரமழானை வரவேற்பதற்காக வரைந்த ஓவியங்களும் சித்திரங்களுமே இவை.
இதன்மூலம் தங்கள் உள்ளங்களிலே ரமழரான் குறித்த அவர்கள் எண்ணுகின்ற எண்ணங்களை வெளிப்படுத்தும் வகையில் இந்த ஒவியங்கள் அமைந்திருப்பதை காணக்கூடியதாக இருந்தன.