-மொஹம்மட் அப்பாஸ்
முஸ்லிம்களின் நோன்பு நோற்கின்ற மாதமான இந்த ரமழான் மாதத்தில் அல்குர்ஆன் இறக்கி அருளப்பட்டதாக முஸ்லிம்கள் நம்புகின்றார்கள். இந்த அல்குர்ஆன் பல்வேறு அற்புதங்களையும் விஞ்ஞான உண்மைகளையும் கொண்டிருப்பதையும் அவ்வவ்போது உலகில் கண்டுபிடிக்கப்படுகின்றன.
இந்நிலையில் அவை விஞ்ஞான உண்மைகள் ஊடாக நிரூபணமாகி வருகின்றன. அந்த வகையில் விண்வெளி பயணத்தை தொடர்புபடுத்தும் குர்ஆனுடைய அற்புதம்; பற்றிய ஒரு அழகிய விளக்கத்தை பின்வரும் கட்டுரை ஆராய்கின்றது. இதன் பயன்கருதி ‘நியூஸ் நவ்’ வசகர்களிடம் இதனை பகிர்ந்துகொள்கின்றோம்..
விண்வெளியிற்கு பயணம் செய்யும் மனிதர்களது பாதிப்பை பற்றி இறைவேதம் பேசுகிறது என்றால் நம்புவீர்களா?
இன்றைய நவீன அறிவியல் உலகம் ஏராளமான மனிதர்களைப் பூமிக்கு வெளியில் நிலவுக்கும், விண்வெளிக்கும் அனுப்பி சாதனை செய்து வருகிறது.
இப்படி விண்ணைத் தாண்டி வானில் ஏறிய விண்வெளியாளர்களின் இதயமானது, வெற்றிடம், மற்றும் ஈர்ப்பு விசை அழுத்தமின்மை காரணமாக, நீள் கோல அமைப்பிலிருந்து சுருங்கி கோல வடிவமாகிறது (Heart shrink like a spherical shape) என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
( படத்தை பார்க்க – பச்சை சாதரண இதயத்தையும் சிகப்பு விண்வெளிக்கு சென்றதால் ஏற்பட்ட மாற்றமடைந்த இதயத்தையும் காட்டுகிறது.)
இது குறித்து விரிவான ஆய்வு முடிவுகள் சில காலங்களுக்கு முன்பு வெளிவந்துள்ளது. வானில் ஏறி விண்வெளிக்குச் செல்லும் மனிதர்களின் இதயம் மட்டும் சுருங்குவதில்லை.
மாறாக, இதயத்தின் தசை செல்களிலும் ஏராளமான மாற்றங்கள் நிகழ்கிறது என்பதை அமெரிக்கா ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஆய்வுக்குட்படுத்தி தனது அறிக்கையை சமர்பித்திருக்கிறது .
(https://www.space.com/25452-zero-gravity-affects…)
எந்த ஒரு இதய நோயும் இல்லாத, ஆரோக்கியமான, மூன்று நபர்களின் இதய ஸ்டெம்செல் இரத்த மாதிரிகளை ஆய்வுக்கு எடுத்தனர்.
அந்த இரத்த மாதிரியின் ஒரு பகுதியை பூமியில் வைத்தும் மறு பாதியை ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் விண்வெளிக்கு எடுத்துச் சென்று… பூமிக்கு மேலே மிதந்து வரும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் ( ISS-International Space Station.) வைத்து சோதித்தனர்… புவி ஈர்ப்பு விசை இல்லா வெற்றிட சூழலில் (Microgravity) ஐந்தரை வாரங்கள் வைத்து ஆய்வு செய்தனர்.
இந்தச் சோதனையில் புவி ஈர்ப்பு விசை இல்லா வெற்றிடச் சூழலில் இதய தசை செல்கள் செயல்பாட்டில் பெரிதும் மாறுதல் நிகழ்ந்தன. குறிப்பாக இதய செல்லில் 2635 ஜீன்களின் அமைப்பு மாற்றமடைந்தது.
இந்த ஐந்து வார சோதனை முடிவில் மீண்டும் பூமிக்கு திரும்பக் கொண்டு வரப்பட்ட இதய தசை செல்களின் மாறிய அமைப்பானது… பூமிக்கு வந்த பத்து நாட்களில் மீண்டும் அதன் பழைய அமைப்புக்கு சென்று விட்டது. வானில் செல்லும் விண்வெளி வீரர்களின் இதயமானது சுருங்குகிறது.
இதயத்தின் அமைப்பு சுருங்குவதன் காரணம்… அதன் தசை செல்களில் ஏற்படும் மாற்றம் என்பதை இன்றைய ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இவ்வாறு சுருங்குவதால் ஏற்படும் பாதிப்பு அவர்கள் மயக்கமான நிலைக்கும் , எதையும் புரிந்து கொள்ள முடியாத தடுமாற்றமான நிலைக்கும் செல்கின்றனர் என்கின்றனர். சுருங்க சொல்வதானால் தன்னிலை மறந்து தடுமாற்ற நிலைக்கு வின் வெளி வீரர்கள் வருகின்றனர்.
(https://www.newscientist.com/…/2222698-spaceflight…)
இந்த நிலை பற்றி இறை வேதம் பேசுகிறது ..
فَمَنْ يُّرِدِ اللّٰهُ اَنْ يَّهْدِيَهٗ يَشْرَحْ صَدْرَهٗ لِلْاِسْلَامِ وَمَنْ يُّرِدْ اَنْ يُّضِلَّهٗ يَجْعَلْ صَدْرَهٗ ضَيِّقًا حَرَجًا كَاَنَّمَا يَصَّعَّدُ فِى السَّمَآءِ كَذٰلِكَ يَجْعَلُ اللّٰهُ الرِّجْسَ عَلَى الَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ
அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்ட நாடுகிறானோ அவருடைய நெஞ்சை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக விசாலமாக்குகிறான் – யாரை அவன் வழி கெடுக்க நாடுகிறானோ, அவருடைய நெஞ்சை, வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்கிறான் – இவ்வாறே ஈமான் கொள்ளாதவர்களுக்கு அல்லாஹ் தண்டனையை ஏற்படுத்துகிறான்.
(அல்குர்ஆன் : 6:125)
وَهٰذَا صِرَاطُ رَبِّكَ مُسْتَقِيْمًا قَدْ فَصَّلْنَا الْاٰيٰتِ لِقَوْمٍ يَّذَّكَّرُوْنَ
(நபியே!) இதுவே உம் இறைவனின் நேரான வழியாகும் – சிந்தனையுள்ள மக்களுக்கு (நம்) வசனங்களை நிச்சயமாக விவரித்திருக்கின்றோம்.
(அல்குர்ஆன் : 6:126)
மேற்பதிவிட்ட வசனம் ஒரு நிராகரிப்பாளனின் மன நிலை விண்வெளியில் செல்லும் மனிதனுடைய இருகிய இதயமுடைய நிலைக்கு ஒப்பானது என்று சொல்லப்படுகிறது.
இந்த உவமை மிகச் சரியாக வின் வெளியிற்கு செல்லும் மனிதனின் இதயம் சுருங்கும் என்பதையும் அவ்வாறு சுருங்குவாதால் அவன் எதையும் புரிந்து கொள்ள முடியாத ஒரு நிலைக்கு செல்கின்றான் என்பதையும் அதே போன்றுதான் நிராகரிப்பவனும் எதையும் புரிந்து கொள்ளமுடியாத தடுமாற்ற நிலையில் இருக்கின்றான் என்றும் மிக கச்சிதமாக ஒரு அறிவியலை பேசுகிறது.
வானில் ஏறி விண்வெளிக்குச் செல்லும் வீரர்களின் இதயத்தின் அமைப்பு சுருங்கியும், அதன் உள் செயல்பாட்டில் பெறும் மாற்றம் ஏற்படுமென்ற உண்மையையும் அதனோடு அவன் அடையும் மயக்கமான நிலையினூடாக எதையும் புரிந்து கொள்ளாத மயக்க நிலை பற்றியுமா…. அல்லாஹ் அன்றே அல்குர்ஆன் வசனம் மூலம் முன்னறிவித்து விட்டான் என்பது ஆச்சரியமே.
சிந்திக்கக்கூடிய மனிதர்களுக்கு இந்த ஒரு வசனமே சத்தியத்தை ஏற்றுக்கொள்வதற்கு போதுமானது… !
மேலும் இன்னுமொரு வேத வசனம் வின்வெளிக்கு செல்லும் நபர்களது பார்வையில் ஏற்படும் மாற்றத்தை பற்றி பேசுகிறது..
وَلَوْ فَتَحْنَا عَلَيْهِمْ بَابًا مِّنَ السَّمَآءِ فَظَلُّوْا فِيْهِ يَعْرُجُوْنَۙ
இவர்களுக்காக நாம் வானத்திலிருந்து ஒரு வாயிலைத் திறந்து விட்டு, அவர்கள் அதில் (நாள் முழுதும் தொடர்ந்து) ஏறிக் கொண்டிருந்தாலும் (அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள்).
(அல்குர்ஆன் : 15:14)
لَـقَالُوْۤا اِنَّمَا سُكِّرَتْ اَبْصَارُنَا بَلْ نَحْنُ قَوْمٌ مَّسْحُوْرُوْنَ
“நம் பார்வைகளெல்லாம் மயக்கப்பட்டு விட்டன; இல்லை! நாங்கள் சூனியம் செய்யப்பட்ட ஒரு கூட்டமாகி விட்டோம்“ என்று நிச்சயமாகக் அவர்கள் கூறுவார்கள்.
(அல்குர்ஆன் : 15:15)
அரபு மொழியில் மேற் குறிப்பிட்ட வசனத்தில் பயன்படுத்தும் சுக்கிரத் “سُكِّرَتْ” என்றால் மதுவினால் ஏற்படும் மசக்க நிலையை போன்ற தடுமாற்ற நிலையை குறிக்கும் அதாவது தன்னிலை உணராத நிலையை குறிக்கும்.
தலைச்சுற்றல், குமட்டல் மற்றும் மங்கலான பார்வை ஆகியவை குடிபோதையில் பொதுவான அறிகுறிகளாகும்.
இதே அறிகுறிகளை இன்று விண்வெளி வீரர்கள் தலைசுற்றல், குமட்டல் மற்றும் மங்கலான பார்வை போன்ற குடிபோதையின் மயக்க நிலை போன்ற நிலையினை விண்ணில் அனுபவிப்பதாக அறிக்கை சமர்பிப்பதை பார்க்க முடிகிறது.
விண்வெளி உங்களை பார்வையற்றவராக மாற்ற கூடும், என்பதாக இறுதியாக கண்டுபிடித்ததாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
ஒரு மர்மமான நோய்க்குறி சர்வதேச விண்வெளி நிலையத்தில் விண்வெளி வீரர்களின் பார்வையை பாதிக்கிறது, இதனால் அவர்கள் பூமிக்கு திரும்பிய பிறகும் பல மாதங்கள் இன் நிலை நீடிக்கும்.
விண்வெளி வீரர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் சுற்றுப்பாதையில் நேரத்தை செலவிட்ட பிறகு பார்வை மோசமடைந்ததாக தெரிவிக்கின்றனர்.
இப்போது விஞ்ஞானிகள் தங்களிடம் இறுதியாக சில பதில்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள் – இது செவ்வாய் கிரகத்திற்கு செல்வதற்கான நமது பயணத்திற்கு நல்லதல்ல என்றும் கூறுகின்றனர்.
அமெரிக்க தேசிய விண்வெளி உயிரியல் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த டோரிட் டோனோவல் தி கார்டியனிடம், “இதை உறுதிப்படுத்தி இரண்டு வருடங்கள் யாரும் செல்லவில்லை, காரணம் விண்வெளி வீரர்களுக்கு பார்வை இழக்க நேரிடும் என்பது கவலையாக உள்ளது” என்று கூறினார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், விண்வெளியில் ஏதோ ஒன்று அதன் விண்வெளி வீரர்களின் சரியான கண்பார்வையில் குழப்பமடைந்து, அவர்களின் பார்வைத் தரத்தில் நீண்டகாலக் குறைபாட்டை ஏற்படுத்துவதாக நாசா தெரிவித்தது.
விண்வெளி வீரர் ஸ்காட் கெல்லி, ஒரு முழு வருடத்தை விண்வெளியில் செலவழித்த அமெரிக்காவின் முதல் விண்வெளி வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான காரணத்தின் ஒரு பகுதியாக அவரது விதிவிலக்கான பார்வை இருந்தது.
வீட்டிற்கு வந்ததிலிருந்து தான் படிக்கும் கண்ணாடிகளை அணிய வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக கூறுகிறார். 2005 ஆம் ஆண்டில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) நேரத்தைச் செலவிட்ட ஜான் பிலிப்ஸ், அவரது திடீர் மங்கலான பார்வையை அவருடன் வீட்டிற்கு கொண்டு வந்தார்.
மேலும் அவரது விமானத்திற்குப் பிந்தைய உடல்நிலையின் போது, அவரது பார்வை 20/20 இலிருந்து 20/ 8க்கு சென்றதை நாசா உறுதிப்படுத்தியது.
ஆறு மாதங்களில் 100. பார்வைக் குறைபாடு “இண்டர் கிரானியல் பிரஷர் சிண்ட்ரோம்” அல்லது “வி.ஐ.ஐ.பி” எனப்படும் இந்த நிலை விண்வெளியில் ஈர்ப்பு விசையின்மையால் ஏற்பட்டதாக நாசா சந்தேகித்தது.
பெரும்பாலான விண்வெளி வீரர்கள் விண்வெளியில் முதல் சில நாட்களில் தலைச்சுற்றல் மற்றும் குமட்டலை உணர்கிறார்கள் ,ஆய்வில் அது இதயம் விண்வெளியில் சுருங்குவதாகவும் கண்டறிந்துள்ளனர்.
மேலும் மங்கலான பார்வை விண்வெளியில் செல்வோருக்கு ஏற்படுகிறது என்றும் கண்டறிந்துள்ளனர்.
இது சமீபத்தில் விஞ்ஞான உச்ச வளர்ச்சியில் அறியப்பட்டது, இருப்பினும் இது கண்டுபிடிக்கப்படுவதற்கு 1400 ஆண்டுகளுக்கு முன்பே குர்ஆனில் சித்தரிக்கப்பட்டது.