விமல் வீரவன்ச நீதிமன்றத்தில் சரணடைந்தார்: பிடியாணை வாபஸ் பெறப்பட்டது!

Date:

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நீதிமன்றத்தில் சரணடைந்ததையடுத்து அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று மீளப்பெற்றுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு எதிராக கறுவாத்தோட்டம் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் நீதிமன்றில் முன்னிலையாகாத காரணத்தினால் அவரை கைது செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் நேற்று (13) பிடியாணை பிறப்பித்திருந்தார் .

பாராளுமன்ற உறுப்பினர் வீரவன்ச தனது சட்டத்தரணியுடன் பிரேரணை விண்ணப்பம் மூலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

சுகயீனம் காரணமாக அவரால் நீதிமன்றத்திற்கு வரமுடியவில்லை என சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

2016 ஆம் ஆண்டு பௌத்தலோக மாவத்தையில் பிரதான வீதிகளை மறித்து மக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தி போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்திய போராட்டத்திற்கு விமல் வீரவன்ச மற்றும் ஐவர் தலைமை தாங்கியதாக கறுவாத்தோட்ட பொலிஸார் குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...