விமானப் பயணச்சீட்டுகளின் விலைகளை மேலும் குறைக்க விமான நிறுவனங்கள் மற்றும் முகவர் நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
பல விமான நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போதே அமைச்சர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியுடன் அண்மைய நாட்களில் விமானக் கட்டணங்கள் தோராயமாக 20 வீதத்தால் குறைந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
வலுவான உள்ளூர் நாணயத்தின் நன்மையை நுகர்வோருக்கு வழங்குவதற்கு பிரதிநிதிகள் ஒப்புக்கொண்டதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.