32 இலட்சம் குடும்பங்கள் உணவுப் பாதுகாப்பற்ற நிலையில்..!

Date:

இந்த நாட்டில் 32 இலட்சம் குடும்பங்கள் உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சிரேஷ்ட ஆராய்ச்சி அதிகாரி பிரசன்ன விஜேசிறி தெரிவித்துள்ளார்.

ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் “ விவசாயமும் உணவுப் பாதுகாப்பும்” என்ற தலைப்பில் நேற்று  நடைபெற்ற  உரையாடலில் அவர் இதனைத் தெரிவித்தார்.

“இலங்கையில் பொருளாதார நெருக்கடி மற்றும் உள்நாட்டு பொருளாதார பாதுகாப்பு” என்ற ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பித்த சிரேஷ்ட ஆய்வு அதிகாரி பிரசன்ன விஜேசிறி, மாதமொன்றுக்கு எண்பதாயிரம் முதல் ஒரு இலட்சம் ரூபா வரை வருமானம் ஈட்டும் மற்றும் சிறுதொழில் மூலம் வருமானம் ஈட்டும் மக்களின் உணவுப் பாவனையும் குறைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும் இந்த நாட்டில் உள்ள குடும்பங்களின் உணவுப் பாதுகாப்பின்மை 54 சதவீதமாக இருப்பதாகவும், நாட்டின் நகர்ப்புற, கிராமப்புற மற்றும் தோட்டத் துறையில் உணவுப் பாதுகாப்பின்மை முறையே 43, 53 மற்றும் 67 சதவீதமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

கடந்த 2021ம் ஆண்டை விட, 2022இல், சிக்கன், மீன், முட்டை உள்ளிட்ட புரத உணவுகளை உட்கொள்வதை 50 சதவீதம் குறைத்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

Popular

More like this
Related

பணிப்பகிஷ்கரிப்பை கைவிட்டு, சேவைக்கு திரும்புமாறு தபால் ஊழியர்களிடம் அமைச்சர் நலிந்த கோரிக்கை!

உரிய சம்பளமும் மேலதிக நேர கொடுப்பனவும் வழங்கப்பட்ட போதிலும் தபால் ஊழியர்களால்...

கம்பஹா மாவட்ட முஸ்லிம் மீடியா போரம் உதயம்: தலைவராக கலாபூஷணம் நிலாம்!

கம்பஹா மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17)...

2026 முதல் 6 மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்த திட்டம்!

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று...

வடக்கு-கிழக்கில் இன்று ஹர்த்தால்!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று திங்கட்கிழமை (18) காலை...