பிரான்ஸில் தொடரும் மக்கள் போராட்டம்: ஜனாதிபதிக்கு நெருக்கடி!

Date:

பிரான்சில் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரான் தலைமையிலான ஆட்சி இடம்பெற்று வருகின்றது.

இந்த நாட்டில் ஓய்வு வயதை 62-ல் இருந்து 64 ஆக உயர்த்தும் வகையில் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தாமல் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் குதித்துள்ளன.

நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்துக்கு தொழிற்சங்கத்தினர் அழைப்பு விடுத்து இருந்தனர். இந்த போராட்டத்துக்கு ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள் உள்ளிட்ட பல ஊழியர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன.

இதையடுத்து அவர்கள் தலைநகர் பாரிஸ் உள்ளிட்ட நகரங்களில் ஆர்ப்பாட்டம், பேரணி உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தினார்கள்.

இந்த போராட்டத்தின் போது வன்முறைகளும் வெடித்தன. பாரிஸில் நடந்த பேரணியின் போது போராட்டக்காரர்கள் பாதுகாப்பு பலகைகள் மற்றும் குப்பை குவியல்களுக்கு தீ வைத்தனர்.

சாலையோரம் இருந்த பொருட்களுக்கும் தீ வைக்கப்பட்டது. மேலும் பல இடங்களில் கறுப்பு உடைகள் அணிந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கடைகள், வங்கிகள், துரித உணவகங்கள் மீது சரமாரியாக கற்களை வீசி தாக்குதல் நடத்தினார்கள்.

இதில் அதன் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சேதம் ஆனது. இதையடுத்து பொலிஸார் அவர்களை கட்டுப்படுத்த முயன்றனர். அப்போது பொலிஸார் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களை வீசினார்கள்.

போலிஸாருக்கும் தொழிற்சங்கத்தினருக்கும் இடையே நடந்த மோதலில் 123 பாதுகாப்பு படை வீரர்கள் காயம் அடைந்தனர். இதனால் பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள்.

மேலும் தடியடியும் நடத்தினார்கள். இதனால் போராட்டக் காரர்கள் சிதறி ஓடினார்கள். இதில் 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பல்வேறு இடங்களில் ரயில் மறியல் போராட்டங்களும் நடந்தன. இதனால் ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. அதிவேக ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

நிலைமையை கட்டுப்படுத்த நாடு முழுவதும் கூடுதல் பொலிஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

பிரான்ஸில் இதுவரை இல்லாத அளவுக்கு நடந்த இந்த போராட்டம் அந்நாட்டு ஜனாதிபதிக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

Popular

More like this
Related

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் இலங்கை வருகை!

இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்று, ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை நிலவும்

இன்றையதினம் (26) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும்...

காசாவில் நெஞ்சை உலுக்கும் கொடூரம்: தந்தையை மிரட்ட குழந்தையை சித்திரவதை செய்த இஸ்ரேலியப் படை!

காசா முனையில் நிலவும் போர்ச் சூழலில், மனிதநேயமற்ற முறையில் ஒரு வயதுக்...

சுயதொழில் உபகரணங்கள் மற்றும் கல்வி நிதியுதவி வழங்கி வைப்பு: பஹன மீடியாவின் மற்றுமோர் மனிதாபிமானப் பணி

இலங்கையில் ஊடகப்பணியைத் தாண்டி, சமூக மேம்பாட்டுப் பணிகளிலும் பஹன மீடியா நிறுவனம்...