IMF ஆலோசனைக்கமையவே எரிபொருள் விலை சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது: எரிசக்தி அமைச்சர்

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமையவும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஆலோசனைக்கு அமையவும் அமைச்சினால் எரிபொருள் விலை சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டதாக   எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் (CPC) பெற்ற இலாபம் அல்லது நட்டத்துடன், எரிபொருளின் மீது விதிக்கப்படும் உண்மையான வரித் தொகை மற்றும் விலையை அதிகரிப்பது அல்லது குறைப்பது ஆகியவற்றைக் கணக்கிடுவதற்கான ஒரு முறையாக புதிய சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது.

மேலும் கடந்த ஆட்சியில் அப்போதைய நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் வழிகாட்டலின் கீழ் எரிபொருள் விலை சூத்திரத்தை பகிரங்கமாக அறிவித்ததன் பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட முதலாவது சூத்திரம் இதுவாகும்.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...