IMF நிதியுதவியை பெறுவதற்கு பசில் முக்கிய பங்காற்றினார்: ரஞ்சித் பண்டார

Date:

சர்வதேச நாணய நிதியத்தின்  உதவியைபெற்றுக் கொள்வதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ முக்கிய பங்காற்றியதாக  நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேராசிரியர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நாட்டை சீர்குலைக்கும் சதிகள் பல்வேறு வழிகளில் நடைபெற்று வருகின்றன. அந்த குழுக்கள்75 வருடங்களாக இந்த நாட்டை சீர்குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அந்த குழுவிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்கள் முதலிடம் பெற தேவையில்லை. சர்வதேச நாணய நிதியம் கடன் பெறவில்லை என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. அது முற்றிலும் பொய்யானது

இம்மாதம் மூன்றாவது வாரத்திற்குள் கடன் தொகை கிடைத்துவிடும் என நம்புகிறோம். அதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. எனவே தற்போதைய ஜனாதிபதிக்கு நாம் நன்றி கூறுகின்றோம்.

இன்று அனைத்து விமர்சனங்களையும் முறியடித்து ரூபாய் மதிப்பு நிலைபெற்றுள்ளது. இது பொருளாதாரத்தில் நல்ல போக்கை காட்டுகிறது. அந்நிய கையிருப்பு குவிந்து வருகிறது.

சுற்றுலாத் துறை மேம்பட்டு வருகிறது. பொதுஜன பெரமுன அதற்காக நிறைய அர்ப்பணிப்புகளை செய்தது. எனவே, சிங்கள, தமிழ் புத்தாண்டை  நல்ல எண்ணத்துடன் கொண்டாடுவோம் என்றார்

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...