நாளை (22) நள்ளிரவு முதல் Ran FM வானொலி அலைவரிசையின் ஒலிபரப்பு நடவடிக்கைகளை இடைநிறுத்த நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, அந்த வானொலி அலைவரிசைக்கு பதிலாக வேறொரு வானொலி சேவை தொடங்கப்படுமா அல்லது அதே வானொலி சேவை மீண்டும் தொடங்கப்படுமா என்பது குறித்து இன்னும் தெரிவிக்கப்படவில்லை.
Ran FM, Sri FM, E FM ஆகியவை சகோதர வானொலி அலைவரிசைகளாகும்.
இதன் உரிமையாளர் மறைந்த திருமதி சோமா எதிரிசிங்கவுக்கவுக்கு சொந்தம் என்றாலும், அவரது மரணத்தின் பின்னர் இந்த வானொலி அலைவரிசையை வேறு தனியார் நிறுவனத்திற்கு விற்கப்பட்டது.