இன்று கொழும்பில் 10 மணிநேர நீர்வெட்டு!

Date:

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் இன்றைய தினம் 10 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இன்று (25) காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

மின்சார சபையின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகளுக்காக அம்பத்தலே நீர் விநியோக நிலையத்திற்கான மின் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளமையின் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கொழும்பு, தெஹிவளை, கல்கிசை, கோட்டை மற்றும் கடுவல மாநகர சபைகளுக்கு உட்பட்ட பகுதிகள், மஹரகம, பொரலஸ்கமுவ மற்றும் கொலன்னாவ நகர சபைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளது.

இதற்கு மேலதிகமாக, கொட்டிகாவத்தை – முல்லேரியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகள், இரத்மலானை மற்றும் கட்டுபெத்த பிரதேசங்களிலும் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

DPL-2026 Season 5 சாம்பியனாக தெல்தோட்டை டிராகன்ஸ் அணி தெரிவு

ஈதுல் பித்ர் நோன்பு பெருநாளை முன்னிட்டு தெல்தோட்டை, வாலிபர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட...

போலி விமான டிக்கெட்டுகள் தள்ளுபடிகள் குறித்து பொலிஸார் எச்சரிக்கை!

விமான டிக்கெட்டுகளுக்கு மலிவான அல்லது சிறப்புத் தள்ளுபடிகளை வழங்குவதாகக் கூறி, சமூக...

இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்திற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 100 மில். அமெரிக்க டொலர்கள்

இலங்கை நெருக்கடி நிலையிலிருந்து மீண்டு, மிகவும் நெகிழ்ச்சியான பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்து...

எரிபொருள் QR குறியீடு தொடர்பில் 1000 முறைப்பாடுகள்!

தவறான முறையில் அல்லது பிறருடைய QR குறியீடுகளைப் பயன்படுத்தி எரிபொருள் பெற்றமை...