இன்று முதல் பால்மா விலை குறைப்பு: உணவுப் பொதிகளின் விலைகளும் குறைகின்றன!

Date:

இன்று முதல் பால்மாவின் விலையை குறைப்பதற்கு பால்மா நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.

ஒரு கிலோகிராம் பால்மாவின் விலையை 200 ரூபாவாலும், 400 கிராம் பால்மாவின் விலையை 80 ரூபாவாலும் குறைப்பதற்கு பால்மா இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், இன்று முதல் பால் தேநீர் கோப்பை ஒன்றை 90 ரூபாவுக்கு பெற்றுக்கொள்ள முடியும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பால்மா மற்றும் சீனி என்பவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதன் காரணமாக அதன் பயனை மக்களுக்கு வழங்கும் நோக்கில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை  மரக்கறிகள் மற்றும் மீன்களின் விலைகள் தற்போது குறிப்பிடத்தக்களவு குறைந்துள்ளமையினால் உணவுப் பொதியின் விலை குறைக்கப்பட வேண்டும்  அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

1300 ரூபாவுக்கு அதிக விலைகளில் விற்பனை செய்யப்பட்ட மீன்களின் விலை, தற்போது 600 ரூபாவுக்கும் குறைந்த விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. மரக்கறிகளின் விலைகளும் வீழ்ச்சியடைந்துள்ளன. பருப்பு, கிழங்கு என்பற்றின் விலைகளும் வீழ்ச்சியடைந்துள்ளன.

நாட்டில் உள்ள பொதுமக்கள் மூன்று வேளை முறையாக உண்பதுக்கு சரியான வேலைத்திட்டங்கள் இல்லை. ஆகையால் எமது சங்கம் வாடிக்கையாளர்களின் நலன்களை கருத்தில் கொண்டு உணவுப் பொதியின் விலைகளை குறைக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

 

 

Popular

More like this
Related

நாட்டில் இன்று வறட்சியான வானிலை!

நாட்டில் இன்று (07) வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...

ஓமான் வாழ் இலங்கையர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு: ஓமான் வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் கலந்துரையாடல்!

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஓமான் வெளிவிவகார அமைச்சர்...