உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் 25ம் திகதி நடத்த தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது
தேர்தல் ஆணைக்குழு இன்று நடத்திய விஷேட ஆலோசனையின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் ஒத்திவைக்கப்பட்ட தபால் மூல வாக்களிப்பு திகதி விரைவில் அறிவிக்கப்படும்.
எதிர்பாராத காரணங்களால் திட்டமிட்டபடி மார்ச் 9 தேர்தலை நடத்த முடியாததால்இ தேர்தலுக்கு மிகவும் பொருத்தமான திகதி ஏப்ரல் 25 என்று தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.