‘திருமணம் எனும் நிக்காஹ்’ திரைப்பட இயக்குனர் அனீஸ் இம்மாதம் இலங்கையில்..!

Date:

சென்னை கிராண்ட் ரிஹர்ஸல் மற்றும் மட்டக்களப்பு கூத்தம்பலம் இணைந்து நடத்தும் திரைப்பட இயக்கம் மற்றும் நடிப்பு பயிற்சி பட்டறையில் வளவாளராக கலந்து கொள்வதற்காக தென்னிந்திய திரைப்பட இயக்குனர் அனீஸ் இலங்கை வருகிறார்.

மார்ச் 30 முதல் ஏப்ரல் 5 வரை மட்டக்களப்பில் நடக்கும் வதிவிட திரைப்பட பயிற்சி நெறியில் அனீஸ் உடன் இணைந்து பிரபல நடிகரும் இயக்குனருமான நாசர் இணைய நேரலையில் பயிற்சி வழங்க உள்ளார்.

திரைப்பட இயக்குனர் அனீஸ் இயக்குனர் நாசர் அவர்களிடம் பல படங்களில் உதவியாளராக பணிபுரிந்து திரைப்பட கட்டுமானங்களை கற்றுக்கொண்டவர்.

இலக்கிய பட்டதாரியான அனீஸ் திரைப்படம் மற்றும் நாடகமும் அரங்கியலும் துறையில் முதுகலை பெற்று தற்போது இத்துறையில் முனைவர் பட்டம் பெறும் தருவாயில் இருக்கின்றார்.

ஜெய் மற்றும் நஸ்ரியா நாஸீம் நடிப்பில் வெளியான ‘திருமணம் எனும் நிக்காஹ்’ திரைப்படமே இவரது முதல் திரைப்படமாகும்.

5 ஆண்டுகாலம் சிறைச்சாலையினை ஆய்வு செய்து ‘பகைவருக்கு அருள்வாய்’ என்ற தனது அடுத்த திரைப்படத்தை அவர் தற்போது இயக்கி வருகிறார்.

சசிகுமார் உட்பட முக்கிய 7 நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படத்தில் ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளும் நடித்துள்ளனர். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

அதனைத் தொடர்ந்து இணையத்தொடர்( web series) மற்றும் புதிய திரைப்படங்கள் இயக்கும் பூர்வாங்க பணிகளில் அவர் ஈடுபட்டு வருகிறார்.

ராடன் தயாரிப்பில் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜமீலா நெடுந்தொடரின் தலைமை இயக்குனரான அனீஸ் இலங்கையின் பாடலாசிரியரும் கவிஞருமான பொத்துவில் அஸ்மின் அதில் பாடல்கள் எழுதுவதற்கு பரிந்துரை செய்திருந்தார்.

அவரது வழிகாட்டலில் கவிஞர் அஸ்மின் மூன்று வெற்றிப் பாடல்களைப் படைத்திருந்தார்.

Popular

More like this
Related

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் உடல் மீட்பு: இலங்கை விஜயத்தை நினைவுகூர்ந்த ஜனாதிபதி ரணில்

 விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, வெளிவிவகார அமைச்சர் எச்.அமீர்...

பொது மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களமானது அடுத்த 36 மணிநேரத்திற்கு செல்லுபடியாகும் புதிய வானிலை அறிவிப்பை...

ஈரானின் புதிய ஜனாதிபதியாக மொஹமட் முக்பர்..!

ஈரானின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி நேற்றைய தினம் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில்...

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம்!

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு...