திஹாரி வை.எம்.எம்.ஏ ஏற்பாட்டில் 1000 தென்னங்கன்றுகளை இலவசமாக வழங்கும் நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மு.ப. 9 மணிக்கு இடம்பெறவுள்ளது.
திஹாரி ஊர்மனை மஸ்ஜிதுர் ரவ்ழா ஜும்ஆ பெரிய பள்ளிவால் கிளினிக் கட்டட முற்றவெளியில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வுக்கு திஹாரி வை.எம்.எம்.ஏ கிளையின் தலைவர் ஜெசூலி மஹ்ரூப் பரீட்சைகள் திணைக்களத்தின் முன்னாள்ஆணையாளர் ஏ.எஸ். மொஹமட் கலந்துகொள்ளவுள்ளனர்.