பல்கலைக்கழகத்தின் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல் மேற்கொண்டமைக்காக பொலிஸார் மன்னிப்பு கோரினர்!

Date:

நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்கும் போது பல்கலைக்கழக வளாகத்துக்குள் கண்ணீர் புகை குண்டுகளை வீசியமைக்காக கொழும்பு பல்கலைக்கழக நிர்வாகத்திடம் பொலிஸார் மன்னிப்பு கோரியுள்ளனர் .

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனம்  நேற்று கொழும்பில் எதிர்ப்பு பேரணி ஒன்றை நடத்தியதுடன், கொழும்பில் பல வீதிகளுக்குள் நுழைய விடாமல் தடுத்ததால், ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு அருகில் ஒன்று கூடியிருந்தனர்.

போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டனர்.

இந் நிலையில் சிலர் கொழும்பு பல்கலைக்கழக வளாகத்திற்குள் தஞ்சம் புகுந்ததையடுத்து பல்கலைக்கழகத்திற்குள் பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை தொடர்ந்தும் மேற்கொண்டுள்ளனர்.

Popular

More like this
Related

நிலவும் சீரற்ற வானிலை: க.பொ.த உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கு அவசர உதவி இலக்கங்கள் அறிவிப்பு!

தற்போது நிலவும் சீரற்ற வானிலையால் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு...

இஷாரா செவ்வந்திக்கு ஆகஸ்ட் 21 வரை விளக்கமறியல் நீடிப்பு

திட்டமிட்ட குற்றக்குழுவின் உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பாகக் கைது...

புனித மக்கா மண்ணில் மிளிரும் இலங்கையின் குரல்: சர்வதேச குர்ஆன் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த ஸயீத் முஹம்மத் இப்பத்!

சவூதி அரேபியாவின் புனித மக்கா நகரில் அமைந்துள்ள புனித மஸ்ஜிதுல் ஹராம்...