பாராளுமன்றில் ஜனாதிபதி வெளியிட்ட விஷேட அறிக்கை!

Date:

நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றில் இன்று விஷேட அறிக்கையொன்றை வெளியிட்டார்.

இதன்போது பணவீக்கம் 50 சதவீதமாக குறைந்துள்ளதாகவும் உணவுப் பணவீக்கமும் 54வீதமாகக் குறைந்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

உரங்களை வழங்குவதன் மூலம், நாடு வசந்த காலத்திலும் கோடைக்காலத்திலும் வெற்றிகரமான அறுவடையைப் பெற்றதாகவும், ஜூன் 2022 முதல் விவசாயப் பொருட்களின் ஏற்றுமதி வழமைக்குத் திரும்பியதாகவும் ஜனாதிபதி கூறினார்.
நாடு ஸ்திரமான பின்னரே தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி, நாட்டை ஸ்திரப்படுத்தியதும் தேர்தல் நடத்தப்படும் என்றும் உறுதியளித்தார்.

பொதுமக்களின் பேச்சுரிமையை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி, எந்த வகையான நாசகார செயற்பாடுகளை  எதிர்கொள்வதற்கும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  மற்றொரு ஜூலை 09ஆம் திகதி நாட்டில் ஏற்பட இடமளிக்க வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு மிகவும் கடினமான பல பொருளாதார நடவடிக்கைகளை அரசாங்கம்  எடுத்துள்ளதாகவும், தற்போது பொருளாதார வளர்ச்சியை உறுதிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், இதனால் சமூகத்தில் உள்ள அனைவருக்கும்  ஏற்படும்  கஷ்டங்கள் தொடரும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

 

Popular

More like this
Related

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...

மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!

மொனராகலையில் உள்ள அரச பாடசாலையொன்றின் மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டதில் ஆசிரியர் சிறு...

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...

ஜப்பானுக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி!

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை...