மருத்துவ பரிசோதனைகளுக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் ஆய்வு கூடங்களுக்கு அபராதம்!

Date:

டெங்கு நுண்ணுயிர் என்டிஜென் பரிசோதனைகள் மற்றும் முழு இரத்த எண்ணிக்கை பரிசோதனைகளுக்காக அதிக கட்டணம் வசூலித்த எட்டு தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ ஆய்வு கூடங்களுக்கு 5.5 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபையினால் அந்த நிறுவனங்களுக்கு எதிராக புதுக்கடை மற்றும் நுகேகொடை நீதவான் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் தீர்ப்பின் பிரகாரம் இவ் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

டெங்கு என்டிஜென் பரிசோதனைக்கான அதிகபட்ச விலை 1,200 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், டெங்கு நுண்ணுயிர்  பரிசோதனைக்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ரூ.3,000 வரை கட்டணம் வசூலித்ததாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

முழுமையான இரத்த எண்ணிக்கைப் பரிசோதனைக்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் 1,000 ரூபா வரை அறவிடப்படும் அதேவேளை அதிகபட்ச விலை 400 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, டெங்கு நுண்ணுயிர் என்டிஜென் பரிசோதனைகள் மற்றும் முழுமையான இரத்த எண்ணிக்கை பரிசோதனைகளுக்கு அதிக கட்டணம் வசூலித்த 10 நிறுவனங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் உண்மைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

 

Popular

More like this
Related

ஜனாதிபதி நிதியம்- ஜனசக்தி அறக்கட்டளை இடையே விசேட புரிந்துணர்வு ஒப்பந்தம்!

18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்குக் கிடைக்கும் சுகாதார வசதிகளை விரிவுபடுத்தும் நோக்கில் ஜனாதிபதி...

வித்யா கொலை வழக்கு; குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு

2015-ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாடசாலை மாணவி சிவலோகநாதன்...

சிறுவர்களின் டிஜிட்டல் பாதுகாப்பை உறுதி செய்யப் புதிய கொள்கை!

சிறுவர்கள் டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் சமூக ஊடகங்களை மேற்பார்வையின்றிப் பயன்படுத்துவதால் ஏற்படும்...

தவெகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு: காங்கிரஸ் விதித்த நிபந்தனை!

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க ஆதரவளித்துள்ள காங்கிரஸ், அக்கட்சிக்கு ஒரேவொரு...