இந்தியாவில் அரசு விருது விழாவில் 13 பேர் கடும் வெப்பத்தினால் பலி!

Date:

 மஹாராஷ்டிரா மாநில அரசின் பூஷண் விருது வழங்கல் விழாவின்போது கடும் வெப்பத்தினால்  13 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று நவி மும்பை நகரில் திறந்தவெளி மைதானத்தில் இவ்விருது வழங்கும் விழா நடைபெற்றபோது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் தத்தாத்ரேயே நாராயணுக்கு இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விருது வழங்கினார். மஹாராஷ்டிரா மாநில முதல்வர் ஷிண்டே மற்றும் துணைத் தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் உட்பட பலர்  கலந்துக் கொண்டனர்.

இந்த விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துக் கொண்டனர். காலை 11.30 மணி முதல் பகல்  நிகழ்ச்சி 1.00 மணி வரை இந்நிகழ்ச்சி நடந்தது.

நேற்று பகல் வெப்பநிலை அதிகபட்சமாக 38 பாகை செல்சியஸ் பதிவாகி இருந்தது. இந்நிலையில், கூட்டத்தில் அமர்ந்திருந்தவர்கள் பலர் கடும் வெப்பநிலை தாங்காமல் சுருண்டு விழுந்தனர்.

இதில், 13 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் வெப்பம் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு  5 லட்சம் ரூபா இழப்பீடு வழங்கப்படும் என மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

 

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...