இந்திய முட்டைகளை பொது மக்களுக்கு விற்பனை செய்ய அனுமதி இல்லை

Date:

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை பொதுமக்களுக்கு விற்பனை செய்ய இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என அரச வணிக பலநோக்கு கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.

அனுமதி கிடைக்கப் பெறும் பட்சத்தில் அது தொடர்பில் மக்களுக்கு அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், ஒரு மில்லியன் முட்டைகளை தாங்கிய கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. அந்த கப்பலில் உள்ள முட்டைகளுக்கான அனுமதியை கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்திடம் பெற வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக அந்த முட்டைகளை கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்திடம் நாளைய தினம் ஒப்படைக்கவுள்ளதாக அரச வணிக பலநோக்கு கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்தள்ளார்.

இதேவேளை, கடந்த 23 ஆம் திகதி இரண்டு மில்லியன் முட்டைகள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டன.

இதனையடுத்து ஒரு மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டன. இதன்படி, இதுவரை நான்கு மில்லியன் முட்டைகள் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

ரிஷாத் பதியுதீனின் அடிப்படை உரிமை மனு விசாரணை திகதி அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை...

வரலாற்றுத் தடம் பதித்த கள்-எலிய கலை விழா!

கவியரங்கு, கலை விழா மற்றும் மீலாத் கவிதை நூல் வெளியீடு உள்ளிடக்கிய ...

வரலாற்றில் முதன்முறையாக வதிவிட விசாவை வழங்கிய இலங்கை!

புதிய திருத்தப்பட்ட குடிவரவு மற்றும் குடியகல்வு ஒழுங்கு விதிகளின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட...