இன்று முதல் டெங்கு தடுப்பு வாரம் பிரகடனம்!

Date:

மேல் மாகாணத்தில் இன்று (26) முதல் டெங்கு தடுப்பு வாரமாக பிரகடனப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் 17,728 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சில் நேற்று முன்தினம் (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சுகாதார பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

இவ்வருடம் இதுவரையில் இருபத்தி ஏழாயிரத்து எண்ணூற்று பதினான்கு டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இந்த நோயாளர்களில் அதிகமானோர் மேல் மாகாணத்தின் கம்பஹா, கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். தற்போது DEN 2 மற்றும் DEN 3 வைரஸ்கள் அதிகளவில் பரவி வருவதாகவும் சுகாதார பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

டெங்கு அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுமாறு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

நாட்டில் இன்று வறட்சியான வானிலை!

நாட்டில் இன்று (07) வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...

ஓமான் வாழ் இலங்கையர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு: ஓமான் வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் கலந்துரையாடல்!

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஓமான் வெளிவிவகார அமைச்சர்...