இன்று வடக்கு, கிழக்கில் பூரண ஹர்த்தால்!

Date:

தமிழர்களது வாழ்விடங்கள் மற்றும் தொல்லியல் சொத்துக்கள் அழிப்பிற்கு எதிராகவும், கொண்டு வர இருக்கின்ற புதிய பயங்கர வாத தடுப்பு சட்டத்திற்கு எதிராகவும் முன்னெடுக்கப்படும் முழு கதவடைப்பு போராட்ட காரணமாக வடக்கு, கிழக்கு  பருத்தித்துறை நகரும் முறறு முழுதாக முடங்கியுள்ளது.

வடக்கு, கிழக்கில் அரசாங்கம் முன்னெடுக்கும் அத்துமீறல்கள், பௌத்த மயமாக்கல் நடவடிக்கை, புதிய பயங்கரவாத திருத்தச் சட்டம் என்பவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழ் கட்சிகள் விடுத்துள்ள பொது கதவடைப்பிற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவினை வழங்கியுள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபையின் போக்குவரத்து இடம்பெறும் போதும் வர்த்தக நிலையங்கள், மரக்கறி மீன் சந்தை உட்பட அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

மேலும் மக்கள் நடமாட்டமும் குறைவாகவே காணப்படுவதாக தெரியவருகிறது.

இந்த ஹர்த்தாலுக்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள பெருமளவு சிவில் அமைப்புக்கள், பொது அமைப்புக்கள், மக்கள் அமைப்புக்கள், வியாபாரிகள், தொழிற்சங்கங்கள், தனியார் போக்குவரத்து துறையினர், பல்கலைகழக மாணவர்கள் என சகலரும் ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளனர்.

Popular

More like this
Related

மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக நான்கு இலங்கையர்கள் காயம்!

மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்கள் காரணமாக மொத்தம் நான்கு இலங்கையர்கள்...

குணமடைந்த 22 ஈரானிய மாலுமிகள் கொக்கல முகாமிற்கு!

தாக்குதலுக்குள்ளான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை...

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...