ஓட்டமாவடியில் 3,000க்கும் மேற்பட்ட கொவிட் உடல்கள் அடக்கம்: கெஹலிய ரம்புக்வெல்ல

Date:

கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்த சுமார் 3,634 பேர் ஓட்டமாவடி புதைகுழியில் அடக்கம் செய்யப்பட்டதை வெளிப்படுத்திய சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அப்போதைய அரசாங்கம் இனவாதத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை என பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் சபையில் எழுப்பிய வாய்மூலக் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், கொவிட் 19 நோயாளர்களின்  உரிமைகள் தொடர்பான பிரச்சினையை ஆராய நியமிக்கப்பட்ட செயலணியின் உறுப்பினர்களை அரசாங்கம் வேண்டுமென்றே தெரிவு செய்ததாக முன்வைத்த குற்றச்சாட்டை அமைச்சர் நிராகரித்தார்.

“பணிக்குழுவில் ஒரு நபர் மாத்திரமே கொவிட் -19 உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதற்கு எதிராக இருந்தார். எனவே, உங்கள் குற்றச்சாட்டை என்னால் ஏற்க முடியாது” என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஓட்டமாவடியில் 2,992 முஸ்லிம்கள், 287 பௌத்தர்கள், 270 இந்துக்கள் மற்றும் 85 கத்தோலிக்கர்களை உள்ளடக்கிய 2,225 ஆண்களும் 1,409 பெண்களும் புதைக்கப்பட்டுள்ளனர்.

Popular

More like this
Related

தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்க முடியும்: சுங்கத் திணைக்களம்

நாட்டில் நாணயக் கடிதங்களை திறந்து உற்பத்தி செய்யப்பட்ட நாடு அல்லாத வேறு...

செம்மணி மனித புதைகுழி அகழ்வாய்வு பணிகளுக்காக 1.9 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு.

இலங்கையின் இரண்டாவது பெரிய மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வுக்கு 1.9...

இலங்கையின் மோசமான வரிக்கொள்கை குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை!

இலங்கையின் வரிக் கொள்கைகள் நாட்டின் 2022 அழிவுகரமான பொருளாதார நெருக்கடியில் முக்கிய...

9 A சித்தி பெற்ற மாணவிக்கு 50,000 ரூபாய் பரிசு!

கல்முனை நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மத்திய மகா வித்தியாலய மாணவி பாத்திமா அனபா,...