கல்முனையில் யானைகள் அட்டகாசம்: பொதுமக்கள் அச்சத்தில்

Date:

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேனைக்குடியிருப்பு நற்பிட்டிமுனை பகுதிகளில்  கடந்த 3 நாட்களாக திடிரென யானைகள் உட்புகுந்து அட்டகாசம் செய்வதுடன் பொதுமக்களின் சொத்துக்களுக்கும் சேதம் விளைவித்துள்ளன.

மேற்குறித்த பகுதிகளில் இவ்வாறு யானைகள் ஒன்றன் பின் ஒன்றாக  உட்புகுந்து மதில்கள் கட்டிடங்களை உடைத்து சேதம் விளைவித்து வருகின்றன.

மேலும் வேளாண்மை செய்கைக்காக விதைப்பதற்கு வைத்திருந்த முளைநெற்களையும் சேதப்படுத்தி வருகின்றதுடன் பொது மக்களும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

இது தவிர குறித்த யானைகள் அங்குள்ள பொதுமக்களின் வீட்டுத்தோட்டம் என்பவற்றையும் பிடுங்கி சேதமாக்கி தப்பிச் செல்வதாகவும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மற்றும் வனபரிபாலன திணைக்களத்திற்கும் பொதுமக்கள் அறிவித்துள்ளதாக குறிப்பிட்டனர்.

மேலும் அண்மைக்காலமாக தினம் தோறும் இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெறுவதனால் யானைக்கூட்டத்தை கட்டுப்படுத்தி காட்டிற்கு விரட்டுவதற்கு அவ்விடத்திற்கு வனஜீவராசிகள் திணைக்களம் வருகை தருவதில்லை என்கின்ற குற்றச்சாட்டு பொது மக்கள் மத்தியில் உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...