சிங்கள-தமிழ் புத்தாண்டு சுபநேர அட்டை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

Date:

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு சுபநேர அட்டை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் பாரம்பரிய முறைப்படி இன்று (03) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.

பாரம்பரிய முறைப்படி மேளதாளத்துடன் கொண்டு வரப்பட்ட சுபநேர அட்டையை புத்தசாசன சமய கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க ஜனாதிபதிக்கு வழங்கி வைத்தார்.

பழைய ஆண்டிற்கான நீராடல், புத்தாண்டு நேரம் , தான நேரம், சமைத்தல், வேலை செய்தல், மற்றும் உண்ணுதல், தலைக்கு எண்ணெய் பூசுதல், பாதுகாப்புக்காக வெளியே செல்வது, மரம் நடுதல் போன்றவை சுப நேரங்களாகும்.

கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் புத்த சாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தன.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்ட முஸ்லிம் மீடியா போரம் உதயம்: தலைவராக கலாபூஷணம் நிலாம்!

கம்பஹா மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17)...

2026 முதல் 6 மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்த திட்டம்!

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று...

வடக்கு-கிழக்கில் இன்று ஹர்த்தால்!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று திங்கட்கிழமை (18) காலை...

பாடசாலை மூன்றாம் தவணை இன்று ஆரம்பம்!

அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான கல்வி...