சூடானில் தங்கியுள்ள இலங்கையர்களுக்கான விசேட அறிவிப்பு

Date:

சூடானில் தங்கியுள்ள இலங்கையர்களுக்கு போர்ட் சூடானில் உள்ள சவூதி அரேபிய அரச செயற்பாட்டு மையத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு வெளிவிவகார அமைச்சு அறிவித்தல் விடுத்துள்ளது.

வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தனது ட்விட்டர் கணக்கில் இந்த விடயத்தை பதிவிட்டுள்ளார்.

சவூதி அரேபிய அரசாங்கம் போர்ட் சூடான் நகரில் உள்ள சிறப்பு பாதுகாப்பான ஹோட்டலில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது.

சூடானில் தங்கியுள்ள இலங்கையர்கள் அந்த இடத்திற்கு வந்து சூடானில் இருந்து வெளியேறுவதற்கு சந்தர்ப்பம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் கூறுகிறார்.

இதேவேளை, சூடானில் தங்கியிருந்த 13 இலங்கையர்களை அங்கிருந்து வெளியேற்ற முடிந்ததாக வெளிவிவகார அமைச்சு நேற்று (26) தெரிவித்துள்ளது.

அங்கு தங்கியுள்ள அனைத்து இலங்கையர்களையும் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் திட்டமிடப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

2 ஆண்டு போர் முடிவுக்கு வந்தது: டிரம்ப் தலைமையில் இஸ்ரேல் – ஹமாஸ் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது: அடுத்து என்ன?

இஸ்ரேல் - காசா போர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. நேற்று எகிப்தில்...

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: தேடப்பட்டு வந்த சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது!

‘கணேமுல்ல சஞ்சீவ’ என்று அழைக்கப்படும் பாதாள உலகக் குழுத் தலைவரான சஞ்சீவ...

நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீ. வரையான பலத்த மழை

இன்றையதினம் (14) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின்...