தமிழ் நாட்டில் சர்வதேச குத்ஸ் தினம் தொடர்பான விசேட நிகழ்ச்சி!

Date:

தஞ்சை வடக்கு மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கும்பகோணத்தில் சர்வ கட்சியினர் பங்கேற்ற ‘இதயங்களை இணைக்கும் இஃப்தார் ஒன்று கூடல்’ நடைப்பெற்றது.

இதில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி, திருவடிக்குடில் சுவாமிகள், ராமநாதன் Ex MLA, மாநகராட்சி துணை மேயர் சு.ப.தமிழழகன், மஜக துணைப்பொதுச்செயலாளர் நாச்சிக்குளம். தாஜ்தீன், விடுதலை தமிழ் புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், முஸ்லிம் லீக் மாநில செயலாளர் A.M.ஷாஜஹான், சிங்கப்பூர் சமூக ஆர்வலர் முகமது ரபீக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டம் திரண்டதால் அரங்கின் மற்றொரு பகுதியிலும் மக்கள் அமர ஏற்பாடு செய்யப்பட்டது.

இன்று சர்வதேச அளவில் பாலஸ்தீன ஆதரவு தினம் AL-QUDS DAY கடைப்பிடிக்கப்படுவதையொட்டி, இஃப்தாரில் பங்கேற்ற அனைவரும் மஜக முன்னெடுத்திருக்கும் ‘நீதிக்கு குரல் கொடுப்போம்; நிரந்தர அமைதிக்கு வழி வகுப்போம்’ என்ற பதாகையை ஏந்தி ஒரு நிமிடம் அமைதியாக எழுந்து நின்று ஆதரவு நல்கினர்.

நிகழ்வில் பேசிய பொதுச் செயலாளர் அவர்கள், ஆக்கிரமிப்பு இஸ்ரேலால் கடந்த ஒராண்டில் 90 பாலஸ்தீன அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், புனித ரமழானில் அல்- அக்ஸா மசூதியில் இஸ்ரேலிய படைகள் வரம்பு மீறுவதாகவும், இதற்கு இஸ்ரேலில் பொறுப்பேற்றுள்ள அதி தீவிர வலது சாரி அரசே காரணம் என்றும் குற்றஞ்சாட்டினார்.

பாலஸ்தீனத்தில் நிரந்தர அமைதி ஏற்பட ரமழா

னில் – நோன்பு துறப்பின்போது பிரார்த்திப்போம் என்றும் கூறினார்.

நிகழ்வில் திருவடிக்குடில் சுவாமிகள், ராமநாதன் Ex MLA, குடந்தை அரசன் ஆகியோரும் பேசினார்கள்.

திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, விசிக, தமுமுக, மதிமுக, தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்ஸிய கம்யூனிஸ்ட் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, நாம் தமிழர் கட்சி, திராவிடர் கழகம், நீலப் புலிகள் இயக்கம், ஆம் ஆத்மி, அ.ம.மு.க, த.மா.க, த.வா.க என அரசியல் பேதமின்றி பலரும் வருகை தந்து சிறப்பித்தனர்.

இதை திருவடிக் குடில் சுவாமிகள் பாராட்டி பேசினார்.

வணிகர் சங்க கூட்டமைப்பு, வணிகர் சங்க பேரமைப்பு, KISWAI .INRBDMA போன்ற வணிகர் அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

மஜக மாநில துணைச்செயலாளரும், மாவட்டத்தின் மேலிட பொறுப்பாளருமான வல்லம் அகமது கபீர் சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.

மஜக சார்பு வணிக அமைப்பான MJVS மாநில செயலாளர் யூசுப் ராஜா, மாவட்ட பொறுப்பாளர் குடந்தை ஆசாத், தலைமை செயற்குழு உறுப்பினர் இக்பால் சேட் ஆகியோரும் முன்னிலை வகித்தனர்.

தஞ்சை மத்திய மாவட்ட பொருளாளர் ஷேக் முஹம்மது அப்துல்லாஹ், தஞ்சை வடக்கு மாவட்ட பிரதிநிதிகள் காதர் செரீப், ஹசேன் முஹம்மது, திருப்பனந்தாள் ஒன்றிய செயலாளர் சாதிக், இஸ்லாமிய கலாச்சார பேரவை செயலாளர் அல்லாபக்‌ஷ் மற்றும் மஜக-வினர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்து கலந்து கொண்டனர்

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...